May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Nama: Shivaaya, Shivaaya Nama: Om.

 

1, விக்னேஸ்வர பூஜை

சுப கார்யங்களின் தொடக்கத்தில் விக்னேஸ்வர பூஜை செய்து விவாஹ கர்மா நிர்விக்னமான நடப்பதற்கு ப்ரார்த்திக்க வேண்டும்,
ஸ்ரீவைஷ்ணவர்கள், விஷ்வக்ஸேன ஆராதனத்துடன் ஆரம்ப்பிப்பார்கள்.

2, பெண் பார்த்தல்

பெண் பார்த்தல் என்பது சாஸ்திர ரீதியாக இல்லாவிடினும் பழக்கத்தில் இருந்து வருகிறது வேதாத்யயனத்தை முடித்த பிரும்மச்சாரி தன் நன்மையை விரும்பக்கூடிய சில பிராம்மணமர்களிடம் திரவிய தானம் போன்று கொடுத்து தனக்குத் தகுந்த பெண்ணை விவாஹத்திற்காக தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்வது ஸம்ப்ரதாயத்தில் இருந்து வந்தது

3. நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர் ஹோமம் போன்ற வைதீக சம்பந்தமான கர்மாக்கள் கிடையாது விவாஹம் நடக்கும் தேதி நேரம் முதலியவைகள் நிச்சயம் ப்ரதானமாக சொல்லப்பட்டு இருக்கிறது 

4. சமாராதனை

சமாராதனையின் போது தம் கிருஹத்தில் ஆச்சாயர் அனுக்ஞையுடன் குலதெய்வத்திற்கு பூஜை புனர்பூஜை ஆகியவை செய்துவிட்டு யதா சக்தி பிராமணபோஜனம் சிரத்தையுடன் விவாஹத்திற்கு முன்பு செய்விக்க வேண்டும் சமாராதனைக்கு நாள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் குலதெய்வத்திற்கு ஏற்ற நாளாய் அமைந்தால் விசேஷம் 

5. சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலி பிரார்த்தனை நாள் பார்த்த்து செய்ய வேண்டும் ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் பொதுவாக ஒரு முறைதான் செய்வது என்பது பழக்கத்தில் இருந்து வருகிறது இதனை விவாஹத்திற்கு பின்பும் செய்யலாம் 6,யாத்ரா தானம்
பொதுவாக வெளியூர் செல்லும்போது யாத்ரா தானம் அவசியம், திருமணத்திற்காக மண்டபத்திற்கு செல்வது உள்ளூராக இருந்தாலும் அங்கு இரவு தங்க வேண்டியிருப்பதால்,யாத்ரா தானம் செய்ய வேண்டும் இதை பிள்ளை வீட்டுக்காரர்கள் செய்வது வழக்கம் ஆயினும் எந்த சுபகாரியங்களை தொடங்கினாலும் வேதம் படித்தவர்களுக்கு தானம் செய்து ஆரம்பிப்பது நல்லது என்ற வகையில் பெண் வீட்டுக்காரர்களும் யாத்ரா தானம் செய்யலாம் 7,பந்தக்கால் முஹூர்த்தம்
விவாஹம் நடக்கும் வீட்டில் முன்னதாகவே ஈஸான்ய மூலையில் கோலம் போட்டு அங்கு பந்தக்கால் நடுவார்கள் அதாவது அந்த பந்தக்காலை ஸ்தம்பரஜன்(மஹாவிஷ்ணுவாக)பாவித்து பூஜை செய்கிறார்கள் புனர்பூஜை விஸர்ஜனம் போன்றவை கிடையாது

8. அஷ்ட விரதம் முதலிய பூர்வாங்கங்கள்

பூர்வாங்கம் என்பது (திருமணத்திற்கு) மன்னேற்பாடுகளாக அமையக்கூடிய சில சடங்குகள் வரனின் வித்யா பர்வம் (வேத அத்யயனம்)முடிந்தது என்றாலே பிரம்மச்சரிய ஆஸ்ரமம் முடிந்ததாக அர்த்தம்,அவர்வர்கள் சார்ந்துள்ள வேத சாகையைப் பொருத்து வேத அத்யயனம் செய்வதை சுருக்கமாக அஷ்ட விரதம் என்று சொல்கிறோம் வேதாத்யயன சம்ப்ரதாயம் கீழ்க்கண்டவாறு இருக்கும் ரிக் வேதம்

முதலில் ஸம்கிஹை பிராம்மணம்,ஆரண்யகம்,உபநிஷத் என்று அத்யயனம் செய்ய வேண்டும் பிறகு ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம்,ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்து பாஷ்யங்களையும் படித்து யக்ஞம் முதலியவற்றை லோகக்ஷேமத்திற்காக செய்து தானும் சௌக்யமாக வாழ வழி செய்து கொள்ள வேண்டும் 

யஜூர் வேதம், ப்ராபாத்ய, சௌம்ய, ஆக்னேய வைஸ்வேதேவ என்ற நான்கினுக்கும்-பூர்வம்,உந்தரம் என இரண்டு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டு பகுதிகள் சாகைகளின் அத்யயனம் முடிந்து பதம் கிரமம் ஜடா பாடம் கனபாடம்.வர்ணகிரமம் என்பது அத்யயன வழக்கம் வர்ணகிரம அத்யயனம் 

விசேஷம் ஸாம வேதம் த்ராஹ்யான சூத்ரர்களுக்கு எட்டு பிரிவுகள் உண்டு அவையாவன, 
உபநயனம்,கோதானம்,வ்ராதிககம்,ஆதித்யம், மஹாநாம்நிகம்,உபநிஷத்,பௌதிகம்,பிரம்மசாமம் ஆகியவை,பிருகிருதி,
ஊஹம்,ரஹஸ்யம்,ஆரணம்,பூரவார்ச்சிகம்,உத்ரார்ச்சிகம்,பதம்,லக்ஷணம் முதலிய எட்டு பிராமணங்களின் கிரந்த அத்யயனம், 


ஒவ்வொரு பகுதியையும் ரிஷி தர்ப்பணம் ஹோமம், இத்யாதிகளுடன் தொடங்கி வேதத்தின் அந்தப்பகுதி தொடர்பான சில கர்மாக்ளை செய்து உத்ஹர்ஜனம் (முடிப்பதற்கான கர்மாக்கள்) செய்ய வேண்டும் இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்க வேண்டும் இதுதான் அஷ்ட விரதம் எனப்படுவது வேதாத்யயனம் முறையாகச் செய்தவர்கள் இந்த அஷ்ட விரதம் என்பதைத் தனியாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது சில பெரியோர்களின் அபிப்ராயம்,இதனால் வேதாத்யயனம் பூர்த்தியாகாதவர்கள் அஷ்ட விரதத்தை அவசியம் செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது கடைசியில் ஸமாவர்த்தனம்,ஸமாவர்த்தனம் எனின் முடிவு என்று பொருள் கொள்ளலாம் குரு தக்ஷிணை கொடுத்துவிட்டு குரு குலத்திலிருந்து வீடு திரும்புவது என்ற கட்டம் இந்த விரதத்தை எப்போது வேண்டுமானாலும் விவாஹத்திற்கு ஆறு மாதம் முன்பே கூட செய்யலாம் என்றாலும் கால தேச வர்த்தமான சூழ்நிலைகளால் விவாஹத்திற்கு ஒரு நாள் முன்னராவது வரன் அவசியம் செய்ய வேண்டும் உத்திராயணத்தில் தான் செய்ய வேண்டும் என்று சாஸ்த்திரங்கள் விதித்துள்ளன், இந்த விரதம் முடிந்த பின்னர் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யவேண்டும் இந்த நிலையில் அவனுக்கு ஸ்நாதகன் என்று பெயர் அதாவது அவன் பிரும்மசரியத்தை கடந்துவிட்டான் ஆனால் கிருஹஸ்தாஸ்ரமத்தில் நுழையவில்லை இப்படி அனாஸ்ரமியாக இருப்பது வேத நெறிகளுக்குப் புறம்பானது என்றபடியால் உடனே விவாஹம் பண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது


ஒருவனுக்கு உபநயனம் ஆகும்போது மௌஞ்சிக்கயிறு(முஞ்சிப்புல் என்ற ஒரு வகையான புல்லால் செய்த கயிறு)இடுப்பில் அணிவிப்பார்கள் பிரம்மச்சரியம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது அந்த மௌஞ்சிக்கயிற்றை மந்திரோக்தமாக அவிழ்ப்பார்கள் பிறகு வபனம் செய்து கொண்டு ஸ்நானம் முடிந்த பிறகு அவனுக்கு இரண்டு உபவீதங்கள் பஞ்சக்கச்சம் உத்ரீயம் வேஷ்டி அணிவித்து வாஸனா திரவியங்களைப் பூசி அலங்காரம் செய்து கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் பாவனையில் ஒருபுத்தகம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து பெற்றவன் என்று காட்டுவதற்காக ஒரு கைத்தடி மற்றும் விசிறி குடை புதிய செருப்பு போன்றவற்றை அணிவிப்பார்கள் 

9. அந்திம ஸமிதாதானம்

பிரம்மச்சரியத்தில் இருக்கும் வடு என்று சொல்லக்கூடிய தினமும் அக்னியில் ஸமிதாதானம் செய்ய வேண்டும் இப்போழுது பிரம்மச்சரியத்தை விட வேண்டிய தருணம் வந்துவிட்டபடியால் கடைசியாக செய்யப்படும் ஸமிதானத்திற்கு அந்திம ஸமிதாதானம் என்று பெயர் இது ஸாம வேதிகளுக்கு மட்டும் உண்டு இந்த கர்மா முடிந்ததும் இந்த அக்னியைப் பாதுகாத்து ஆயுள்பூராவும் நிதய ஔபாஸனாதிகள் செய்ய வேண்டும்

10. நாந்தீச்ராத்தம்

நாந்தீ என்ற ஸ்ம்ஸ்கிருத பதத்திற்கு பொதுவாக மகிழ்ச்சி சுபசடங்குகளின் தொடக்கத்தில் செய்யப்படும் பிரார்த்தனை என்று கூறலாம் தேவபூஜை போல் பித்ரு பூஜனமும் மங்களகரமானதே மேலும் நம் மீது உள்ள பிரியத்தால் அவர்கள் நாம் அழைக்காமலே உரிமையுடன் வருகிறார்கள் பிராமணர்களுகு த்ரவ்யங்களுடன் யதோக்தமான தக்ஷிணை கொடுத்து 
போஜனம் செய்வித்து பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டும் போஜனம் சேவிக்க சௌகர்யமில்லாதவர்கள் அதம பக்ஷமாக ஹிரண்ய ரூபமாக நாந்தீ சார்த்தத்தை அவசியம் செய்ய வேண்டும்

11. கூஷ்மாண்ட ஹோமம்

விரத சமாவர்த்தனம் ஆன பிறகு பையன் கூஷ்மாண்ட ஹோமம் செய்கிறான் இது விவாஹம் ஆவதற்கு முன்புதான் செய்ய வேண்டும் என்று எல்லா கிரந்தங்களையும் விவரமாக பரிசீலனை செய்து எனது பூஜ்ய இந்த ஹோமம் புஷ்பவதியாகிய பெண்ணை விவாஹம் செய்ய நேர்ந்ததற்குப் பிராயசித்தமாக செய்யப்படுகிறது இதனால் விருஷனி பதிதவ தோஷமும் ஏற்படாது ருருமதியான பெண் எத்தனை முறை ருது ஆகியிருக்கிறாளோ குறைந்தது அத்தனை கோதானம் செய்ய வேண்டும்
கோதானத்தின் ப்ரதிநியாக மிடிந்த அளவுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும் பெண்ணும் ஒரு நாள் உபவாசமிருந்து ருது ஆகாத பெண் குழந்தைக்கு ஆபரணத்தை தானமாக கொடுக்க வேண்டும்

12. பெண்ணிற்கு ஜாதகர்மா முதலியன

பெண்ணிற்கு ஜாதகர்மா முதலியன உரிய காலத்தில் செய்ய தவறியதற்காக பிராயசித்தாதிகள் செய்துவிட்டு பெண்ணின் தந்தை புண்யாகவசனம் செய்து அந்த ஜலத்தினால் பெண்ணிற்கு ப்ரோக்ஷணம் செய்வித்து அவளை கண்ணால் பார்த்து உச்சி முகர்ந்து அவளுடைய வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்ல வேண்டும்,பிறகு அன்னப்ராசனம்(தயிரும் நெய்யும், கலந்து) செய்விக்கவேண்டும் பிறகு குழந்தைக்கு நாமகரணம் செய்வது போல் தரையில் நெல்லைப் பரப்பி அதில் அவள் பெயரை எழுத வேண்டும் இந்த கர்மாவை உரிய காலத்தில் செய்துவிட்டால் மறுபடியும் ஜாதகர்மாசெய்வது பழக்கத்தில் இருந்து வருகிறது 

13. கங்கண பந்தம்(ப்ரதி ஸர பந்தனம்)

திருமணம் செய்து கொள்ள தீர்மானித்ததும் சங்கல்பம் செய்து கொண்டு பிரதிஸரம் (ரக்ஷை) கட்டிக் கொள்ள வேண்டும் கங்கணம் என்றால் காப்பு பந்தம் அல்லது பந்தனம் என்றால் கட்டிக் கொள்வது ப்ரதிஸரம் வது வரன் இருவருக்கும் உண்டு இந்த ரக்ஷை கட்டிக்கொண்ட பிறகு துர்தேவதைகள் அண்டா ஆசௌசம் (தீட்டு) முதலியவை அவர்களைப் பாதிப்பதில்லை என்ற அபிப்ராயமும் இருந்து வருகிறது இந்த ரக்ஷை கட்டிக் கொண்டதும் கூடிய வரையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,திருமணம் முடிந்த பிறகு இந்த ரக்ஷையை விஸர்ஜனம்(அவிழ்த்து விடுதல்)செய்யத் தேவையில்லை ஆண் வலது கரத்திலும் பெண் இடது கரத்திலும் தரிக்க வேண்டும்

14. பாலிகை தெளித்தல்(அங்குரார்ப்பணம்

பல்லவம் என்பது இளந்தளிர் அல்லது புதிதாக முளைவிட்ட செடி என்று பொருள் பாலிகா என்றால் கூரான இலைகளையுதைய பயிர்கள் பாலிகை தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்கு பாலிகா என்றுசொல்வர்,அங்குர;என்றால் முளையிட்ட விதை என்று அர்த்தம் அங்குரார்ப்பணம் (அங்குர;+அர்ப்பணம்)என்ற சொல்லிற்கு முளைவிட்ட விதைகளை பாலிகைகளில் அர்ப்பணித்தல் எனக் கருத்தாகும் பாலிகை தெளித்தல் வழக்கத்தில் இருந்து வருவது;திருமணம் உபநயனம போன்ற எல்லா விசேஷங்களுக்கும் அங்குரார்ப்பண, எனும் சடங்கு உண்டு இந்த பயிர்கள் தழைத்து வளர்வது போல் சுப காரியங்கள் நன்கு நடக்க வேண்டி பிரார்த்தித்து இதனை கொண்டாடுவார்கள் விவாஹத்திற்கு முன் ஒற்றைப்படையான தினங்களில் மந்திரோக்தமாகச் செய்யப்படுவது உதாரண்த்திற்கு ஞாயிற்றுக்கிழமை விவாஹம் என்றால் அதற்கு முந்தைய வெள்ளி,புதன்,திங்கள் போன்றவை ஒற்றைப்படை தினங்களாகும் விதைகள் தெளிக்கும்போது தனித்தனி மந்திரம் உண்டு ஓஷதி ஸூக்தம் போன்றனைகள் சொல்லப்படுகின்றன தெளித்தபின்னர் பஞ்சகவ்யத்தை புரோக்ஷித்து மண்ணைப் போட்டு மூட வேண்டும்,பிறகு ஐந்து ஏழு ஒன்பது என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிகள் ஊறவைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிப்பர் ஊறவைத்த தான்யங்களை தெளிப்பது கர்த்தா மட்டுமே அதாவது மாப்பிள்ளை வீட்டில் கலயாணப் பையனின் தந்தையும் பெண் வீட்டில் பெண் தந்தையுமே பாலிகை கரைக்கும் வரை அவற்றிற்கு யாராவது ஒரு சுமங்கலிப்பெண் நீர் வார்த்து விளக்கேற்றி பூஜை நைவேத்யம் முதலியவை செய்வது உசிதம் இதை இரண்டு பேர் வீடுகளிலும் தனித்தனியாக செய்ய வேண்டும் பாலிகை வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் கரைக்கும்போதும் அதே மந்திரங்களால் பிரம்மாதி தேவர்களை உத்வாஸனம் செய்து நதியில் கரைக்க வேண்டும் பாலிகைகளை(மண் பாத்திரங்களை)வீட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்பது நல்லது

15. காசி யாத்திரை 

கிரஹந்தாஸ்ரமத்தை அணுகி விவாஹம் மற்ற தத்மாங்களை அனுஷ்டிக்க தனம் தேவை எனவே காசிராஜனிடம் சென்று பணம் யாசித்து வருவதற்கு வரன் காசி யாத்ரை செல்கிறான் அப்பொழுது பெண்ணின் பிதாவானவர் மாப்பிள்ளை காசிக்குப் போக வேண்டாம் என்று கூறி வரனை முறைப்படி வரவேற்று பாத்யம் ஆசமனம் போன்ற உபசாரங்கள் செய்து தன் பெண்ணை கன்னிகாதானம் செய்து தருவதாக வாக்களிக்கிறார் இதுவே காசியாத்திரையின் தாத்பர்யம்

16. மாலை மாற்றுதல்

பிறகு பெண் பிள்ளை இருவரும் தாய் மாமன்மார்கள் கூட வர,மாலை மாற்றிக் கொள்வர் இப்படி மாலை மாற்றிக் கொண்டதுமே திருமணம் நடந்துவிட்டதாக சிலரின் அபிப்ராயம் ஏனெனில் சாதாரணமாக ஒருவர் அணிந்து கொண்ட மாலையை மற்றவர் அணிவது சாஸ்திர விரோதம் ஆகவே இந்த மாலை மாற்றல் என்பதே இருவரும் ஒன்று என்ற அந்யோந்யத்தை வெளிப்பதையாக்குகிறது மற்றபடி இதில் மந்திரபிரயோகம் எதுவும் இல்லை மாலை மாற்றல் மற்றும் ஊஞ்சலின் போது வரன் பஞ்சகச்சம் இரட்டைப் பூநூல் என விவாஹிதன் போல் இருந்தாலும் பெண் ஒன்பது கஜம் புடவை கட்டிக் கொள்வதில்லை இது ஏன் என்றால் விரதம் முடிந்துவிட்டால் பையன் பிரம்மச்சரியத்திலிருந்து வெளிவந்து விடுகிறான் ஆனால் பெண் மங்கள ஸ்நானம் செய்து பையன் கொடுக்கும் கூறைப் புடவையை ஸம்ப்ரதாயப்படி கட்டிக் கொள்ள வேண்டும் கன்யாதானம் ஆன பின்பு தான் பையன் புடவையைக் கொடுப்பான் அதன்பின் சங்கல்பாதிகள் முடிந்ததும் ஒன்பது கஜம் புடவையை அணிவாள் 

17. ஊஞ்சல்

இது ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து எந்த துர் தேவதைகளை விரட்டுவதற்கும் சிவப்பு வர்ணம் பயன்படுத்தப்படும்,அது போலவே வது வரன் இருவரும் ஊஞ்சலில் முதல் முறையாக சேர்ந்து அமர்ந்தவுடன் சுமங்கலிப் பெண்கள் திருஷ்டி கழிக்கும் முக்மாய் சிவப்பு நிறம் கலந்த அன்ன உருண்டைகளை நாலு பக்கம் சுற்றிப் போடுவார்கள் இந்த அன்ன உருண்டைகளை பூத பலியாகக் கருதி யக்ஷி என்ற பெயர் கொண்ட பிம்ம ராக்ஷஸன் திருப்தியடைந்து அங்கிருந்து அகன்று விடுகிறான் இது சமயம் அங்கு கூடியிப்போர் செவிக்கினிய பாடல்களைப் பாடி வதூவரர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவார்களாம் மேற்படி அன்னத்தினால் கரைக்கப்படும் ஆராத்தி எடுத்து மணமக்களை மேளதாளத்துடன் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.

18. அனுக்ஞை

தன் பெண்ணை கன்யாதானம் செய்து கொடுப்பதன் மூலம் பின் உள்ள (21)சந்ததியினர் நற்கதி அடைவார்கள் என மந்திரங்களைச் சொல்லி பிராமணர் களுக்கு தக்ஷிணை கொடுத்து திருப்தி படுத்தி அனுக்ஞை பெறுவர்

19. கன்யாதானம்

பொதுவாக வேத ஸம்ஸ்காரங்களைச் செய்ய தர்மபத்னி சமேதராயுள்ளவர் தகுதி பெற்றவர்களாகிறார்கள் பெண்ணின் தகப்பனாக்கும் இது பொருந்தும் பெண்ணின் தாய் அருகிள் இருந்து ஜலம் வார்த்து கொடுக்க தந்தை கன்யாதானம் செய்து கொடுப்பார் இது மஹாதானம் எனப்படும் மற்ற தானங்களை பெறுவர் உட்கார்ந்தும் கொடுப்பவர்கள் நின்றும் இருப்பர். உதாரணமாக கோதானம் செய்பவர் அந்த க்ஷணம் வரை மாட்டிற்குச் சொந்தத்கார்ராயிருப்பார் தானத்திற்குப் பிறகு தானம் கொடுத்த பிறகும் அவளின் தந்தையாகவே இருப்பார்கள் தானம் பெற்ற மாப்பிள்ளை அவளுக்கு கணவனாகத்தான் இருக்க வேண்டும் முன்னதாக மாப்பிள்ளை
மஹாவிஷ்ணுவின் அம்சமாக பாவித்து வதூவின் பிதா உபசாரங்கள் செய்வார். ஆகவே தான் திருமணத்தின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஸன்னமாகி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மஹாலக்ஷ்மி ரூபமான தம்பதிகளை ஆசீர்வதிக்கின்றனர்.

முக்ய மந்த்ரங்கள் சில:

     கன்யாம் கனக ஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்
     தாஸ்யாமமி விஷ்ணவே துப்யம் பிரும்லோக ஜிகீஷயா
     விஸ்வம் பரா; ஸர்பூதா; ஸாக்ஷிண்யா;ஸர்வ தேவதா;
     இமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி ப்த்ருணாம் தாரணாயச
     கன்யே மே ஸர்வதோ பூயா;த்வத்தானாத் மோக்ஷமாப்நுயாத்
     இமாம் மதீயாம் கன்யாம் தர்மப்ரஜா ஸஹத்வ கர்மப்ய; ப்ரதிபாதயாமி 

என்ற மந்திரங்களை ஓதி -

     நாமகோத்ரே ஸமுச்சார்ய பராங்முகோ வாரிபூர்வகம்
     உதங்முகாயவை தத்யாத் கன்யாம்ச யவீயஸீம்

நாம கோத்திரங்களைச் சொல்லி கிழக்கு முகமாக் (நெல் விதை மூட்டை மீது) அமர்ந்து கொண்டு தீர்த்த பூர்வமாய் வடக்கு முகமாக நிற்கும் வரனுக்கு வயஸில் சிறியவளான பெண்ணை தானம் செய்ய வேண்டும்
நடைமுறையில் மேற்கு முகமாக நிற்கும் மாப்பிள்ளைக்கு தாம்பூலம் பூர்ணபலம் ஸ்வர்ணம் ஆகியவற்றுடன் பெண்ணின் கைகளை தன் கைகளின் மேல் வைத்து மனைவியை தாரை வார்க்கச் சொல்லி கன்னிகாதானம் செய்ய வேண்டும் ஸாமவேதி மாப்பிள்ளை கன்னியின் கைகளைப் பற்றி மந்திரம் ஏதும் இல்லாமல் அக்னி மேடைக்குச் செல்வான் யஜுர்வேதிகள் ப்ரஜாபத்யே என்ற மந்திரத்தை சொல்லி அக்னி சமீபத்திற்கு பெண்னை அழைத்துச் செல்வார்கள் பெண்ணைப் பெற்றவர் கன்னிகையை தானமாகக் கொடுத்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்கிறார் மணமகன் தானமாகக் கிடைத்த பொருளை யாசகம் பெறுகிறான் அதன் பலன் என்ன? ஸவித்ரு என்ற தெய்வத்தின் ஆசிகள் கிடைப்பதற்காக தேவர்களுடைய பாஹுக்களாலும் பூஷாவின் கரங்களாம் இதை வாங்கிக் கொள்கிறேன் என்ற மந்திரத்தைச் சொல்லி கன்னிதானம் செய்துக் கொள்கிறான். புஜம் என்பதை பாஹு என்றும் அதன் அதிஷ்டமான தேவதையாக அஸ்வினி தேவதை இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது முன்பை என்று சொல்லப்படும் கரங்களுக்கு பூஷா அதிஷ்டமான தேவதையாக இருக்கிறார் இந்த இருவர் பெயராலும் தானம் வாங்கிய பொருள் நல்வழியில் பயன்படுத்தினால் தானம் வாங்கிய குறைகள் நீங்கும்.

20. கூறைப்புடவை

பெண்ணிற்கு புதிய வஸ்திரங்கள்(கூறைப்புடவை) அணிவித்து லௌகிக சம்பிரதாயப்படி வரனின் சகோதரிகள் மேடைக்கு அழைத்து வருவர் கூறை (நாட்டு) புடவை என்ற பெயர் நிலைத்து விட்டது.

புடவை கொடுக்கும் போது இந்திரனைப் பார்த்து சொல்லப்படும் மந்திரம்:

     பரித்வா கி ர்வணோகி ர இமா ப வந்து விஷ்வத;
     விருத்தாயு மனுவிருத்தயோ ஜுஷ்டா ப வந்து ஜுஷ்டய்;

ஹே இந்திரனே எவ்விதம் இந்தக் கன்னிகை புடவையால் தன் உடல் முழுதும் சூழப்பட்டிருக்கிறாளோ அப்படியே நான் உன்னைப் போற்றிப் புகழும் ஸ்தோத்திரங்கள் என்னைக் காப்பாற்றட்டும்.

21. மாங்கல்ய தாரணம்

மாங்கல்ய தாரணம் ஒரு சம்ப்ரதாயம் தான் வட இந்தியாவில் இப்பழக்கம் இல்லை.

இதற்கான மந்திரம்:

     மாங்கல்யம் தந்துநானேன மமஜீவன ஹேதுநா
     கண்டேபநாமி ஸுபகே த்வம் ஜீவ சரத்சதம்
     ஸுபகே மமஜீவன ஹேதநா அநேந தந்துநா
     கண்டே பத்நாமி சதம் சரத; ஜீவ

மங்களககரமான பெண்ணே நான் ஜீவிப்பதின் நோக்கம் நிறைவேறுவதற்கு, அதாவது தர்ம முறையில் வாழ்க்கையை நடத்துவதற்காக இந்த கயிற்றினால் கண்டே பதநாமி- (உன்) கழுத்தில் அணிவிக்கிறேன் (நீ) நூறு ஆண்டுகள் வாழ்வாயாக.

ஆனால் விவாஹத்தில் பாணிக்கிரஹணம், ஸப்தபதீ ஆகியவைதான் முக்கிய கட்டங்கள். இவையே சுப முகூர்த்த வேளையில் செய்யப்பட வேண்டியவை என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

22. முஞ்சிப்புல் கட்டுதல்

 

மாங்கல்ய தாரணம் முடிந்து மணமகன் முஞ்சிப்புல் கயிற்றினை பெண்ணில்  இடுப்பில்   கட்டுகிறான், இது உபநயனத்தின் போது பிம்மச்சாரிகளுக்கு கட்டுவதற்கொப்பாகும் ஆண்களுக்கு எட்டு வயதில் எப்படி உபநயனம் செய்விக்கப்படுகிறதோ,பெண்களுக்கு அதேபோல் விவாஹம் செய்விக்கப்படுகிறது,அப்போழுது தான் பெண்களுக்கு கர்மாக்கள்

செய்வதற்கான அதிகாரம் கிடைக்கிறது,இது ஸாம வேதிக்கு இல்லை                        

         23,  அபாலையின் வரலாறு மற்றும் நுகத்தடி வைத்தல்

மணப்பெண் மந்திர ஸ்நானம் செய்து கூறைப்புடவை அணிந்து மேடையில் அமர்கிறாள், மணமேடை அமர்ந்த பெண்ணின் தலையில் நுகத்தடியை வைத்து மந்திரங்களைக் கூறுவர்,இந்த நிகழ்ச்சி ரிக் வேத சம்பந்தமுள்ள ஒரு வரலாற்றை ஆதாரமாகக்கொண்டுள்ள, அபாலை என்ற பெண் நோயினால் அழகு குன்றியிருந்ததால் திருமணத்தடை ஏற்பட்டது,அவள் இந்திரனை மனதில் நினைத்து,அவள் குறையைக்கேட்ட  இந்திரனும் அவளைதேர்,வண்டி சக்கரம் மற்றும் நுகத்தடியில் உள்ள                                                                                                                                                                                                                                                                                                                                       தூவரங்களில் மூன்று முறை நுழைத்து வெளி கொண்டு வந்த்தாகவும் ரிக் வேதம் கூறுகிறது, அதேபோல் மணப்பெண் தலைமேல் நுகத்தடியின் துவாரத்தை வைத்து அதன் மீது பொற்காசுகளை வைத்து புனிதநீரை வார்த்து விடுவதனால் அவளை ஏதாவது மிகதீய சக்திகள் அவை விலகிவிடும்

(கே அனஸ; கே ரத; கே யுகஸ்ய சசிபதே,அபாலாம் இந்த்ர த்ரி;

பூத்வீம் அகரத் ஸுர்யவர்ச்சஸம்)

சசியின் கணவரான இந்திரனே,சக்கரம்,தேரின் அச்சு நுகத்தடி வழியாக அபாலையை நகர்த்தி அவளின் குறையை நிவர்த்தி செய்து அவளை சூரியனைப் போல் அழகுறச் செய்தாய்

                           24, பாணிக்ரஹணம்

பாணிக்ரஹணம் என்றால் கரம் பற்றுதல் என்று பொருள் கன்னிகையின் வலது கரத்தை பையன் தனது வலது கரத்தால் பிடித்துக் கொண்டு (பூஷா த்வேதோ நயது ஹஸ்தக் ருஹயாஷ்விநௌ த்வாப்ரவஹதாம் ரதே ன க் ருஹான்க ச்ச க் க்ருஹபத்நீ யதா அஸோ வசினி த்வம் வித் த மாவதா ஸி) பூஷா என்ற தேவன் உன் கையை பிடித்து அக்னியின் அருகில் அழைத்துச் செல்லட்டும்,அஸ்வினீ தேவர்கள் உன்னை புஸ்பரதத்தில் எனது கிஹத்திற்கு அழைத்துச் செல்லட்டும்,ஆசியுடன் சுற்றத்தாருடன் ஆரோக்கியமாக நாம் வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் என்ற மந்திரத்தால் அக்னியின் அருகே கிழக்கு முகமாக இருவரும் அமருகிறார்கள்,பெண்பையனுடை வலது கை பக்கம் அமருவாள் பிறகு மேன்மையான இருவரும் தர்ம சாஸ்திரங்களில் கூடியுள்ளபடி அன்யோன்யமான மற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எப்படி ஒரு

வருக்கு ஒருவர் விட்டுக் கொத்தும், சுகதுக்கங்களில் பங்கு கொண்டு ஒற்றுமையாக ஆரோக்கியத்துடனும்1),`க்ருப்ணாமிதேஎன் தர்மபத்னி உத்தம்மான புத்திரனைப் பெற்றெடுக்கவும் ஒருமித்து வாழவும் குலம்

தழைக்க உன்னை பகன்,அர்யமா,சவிதா,இந்திரன்முதலான தேவர்கள்

உனது தாய் தந்தைமூலம் எனக்கு அளித்திருக்கிறார்கள் அவர்களைப் போலவே  நாமும் இல்லறத்தை பேணி பூஜை ஆராதனை ஹோமம்

யாகம் யக்ஞம்  எல்லா சௌகர்யத்துடனும் தீர்காயுஸுடனும் வாழவேண்டும் என்பதை வரன் பெண்ணிற்குப் எடுத்துச் சொல்கிறான்,ஏற்கனவே வேதாத்யயனம் செய்தவனாகையால் அனுபவ பாடம் இல்லாவிட்டாலும் கற்றுக் கொண்ட கல்வியை அவளுக்குப் போதிக்கிறான் வேறு வேத வேறு சாகையினருக்கு மந்திரப் பிரயோகங்களில் சற்று பேதங்கள் இருக்கலாம்

                             25,  ஸப்தபதீ

ஸத் என்றால் ஏழு, பதீ என்பது பாதம் என்ற சொல்லைத் தழுவியது, அதாவது ஏழு அடிகள் எடுத்து வைப்பதை ஸப்த பதீ என்கிறோம்,இது தான்

விவாஹத்தின் மிக முக்கிய அம்சம் மணமகன் பெண்ணின் வலது பாத கட்டை விரலை தன் வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ஏழு முறை சிறிது சிறிதாக நகர்த்த வேண்டும்,அதற்கான மந்திரம்  மந்திரம் மந்திரம்

(ஏகமிஷே விஷ்ணுஸ்த்வாந்வேது,தவே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வாந்வேது

த்ரீணி வரதாய விஷ்ணுஸ்த்வாந்வேது,சத்வாரி மயோப வாய

விஷ்ணுஸ்த்வாந்வேது,பஞ்ச பகப் ய; விஷ்ணுஸ்த்வாந்வேது,

ஷண்ருதுப் ய;விஷ்ணுஸ்த்வாந்வேது,ஸப்த ஸப்தப்யோ ஹோத்சாப்யோ

விஷ்ணுஸ்த்வாந்வேது) இந்த முதல் அடியை வைக்கும்போது( தான்ய விருத்தியும்,அன்னபானாதிகளின் விருத்தியின் பொருட்டும் 2,ல் உடல் வலிமையின் மனவலிமையின் பொருட்டும் 3,ல் விரதாதிகளுக்கு

உதவும் பொருட்டும், 4,ல் சுகத்திற்காகவும்,நன்மைகள் பொருட்டும்5,ல் பசு

முதலானவைகளுக்கு உதவும் பொருட்டும் 6,ல் பருவங்களின் நன்மை பெறும் பொருட்டும், கடைசியில் 7,ம் அடியில் யாகயக்ஞங்களை குறைவறச் செய்ய அருளுமாறும் விஷ்ணுவின் அனுக்ரஹம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும் இல்லறத்தில் உணவு உடல் நலம் மனநலம்

தனதான்ய பசு,பால் விருத்தி பருவகாலங்களின் அனுகூலம், பெரியோர்களின் ஆசிர்வாதம் இவைகள் மிக முக்கியம் இவை பெற கொஞ்ச தூரம் நாம் இருவரும் சேர்ந்து வந்தால் சகா அதாவது சினேகிதர்களாகுவிட்டோம், நீ என்னை விட்டு விலகாதிருப்பாய்,நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்யலாம்,என்று அடுத்த மந்திரம் கூறுகிறது பாணினீய சூத்ரத்தில் ஸாப்தபதீனம் ஸக்யம் என்று வரும் அதாவது இரண்டு பேர் ஏழு அடிகள் ஒன்றாகச் சேர்ந்து போனால் இருவரும் சினேகிதர்கள் ஆகும்

(ஸகா ஸப்தபதா ப வ ஸகாயௌ ஸப்தபதா ப பூ வஸக் யந்தே க மேகம் ஸக் யாத்தே மாயோஷம் ஸக் யாந்மே மாயோஷ்டா; ஸமயாவ ஸங்கல்பா வஹை ஸம்பிரியௌ ரோசிஷ்ணு ஸுமனஸ்யாநௌ)

இந்த மந்திரங்கள் கணவனும் மனைவியும் ஸ்னேகிதர்களாக வாழ்நாட்கள்

பூராவும் பகவதனுக்ரஹத்துடன் வாழ ப்ரார்த்திக்கின்றன இப்படி மனதிற்கு இனிமையானதும் ஸ்ரேஷ்டினமானதும் ஆகிய மந்திரங்களை ஓதி இருவரும் முன்போல் கரங்களைப் பற்றியவாறு அக்னியை வலம் வர வேண்டும்,பிறகு பத்நீ விரல்களால் தொட்டுக் கொண்டிருக்க மாப்பிள்ளை பத்து ஹோமங்களைச்(பதினாறு ஆஹுதிகளை) செய்கிறான் இனி பெண்ணை பத்நீ என்று சொல்லலாம்,வைதீக தர்மப்படி விவாஹம் ஆன பெண்ணிற்கு மட்டுமே பத்நீ என்றபதவி கிடைக்கிறது,தர்ம காரியங்களில்

கணவனுடன் கூட இருக்க அதிகாரம் பெற்ற பத்னியுடன் செய்யும் காரியங்களுக்குத்தான் பலன் உண்டு அதனாலேயே அவள் தர்மபத்நீ என்று

அழைக்கப்படுகிறாள்   (ஹோமங்களுக்கான மந்திரங்களில் சிலவட்ரை)

1,இந்த கன்னிகையை அடைந்த ஹோமனுக்காக(ஸோமாய ஜனிவிதே ஸ்வாஹா)=இந்த நெய்யை ஆஹுதீ செய்கிறேன்

2, கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா> கந்தர்வனுக்கு

3,அக்நயே ஜனிவிதே ஸ்வாஹா> அக்னிக்கு

4,இவளின் கந்யாபருவத்தில் ஏதாவது(கந்யளா பித்ருப்யோ யதீ பதிலோகமவதீ க்ஷமதாஸ்த ஸ்வாஹா>குறை ஏற்பட்டிருப்பின் அவைகள் நீங்குவதற்காக,

5,ஆகட்டும், பிதாவிந் குலத்திலிருந்து என்(ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ்ஸுப்த்தா மமுதர்கரத் யதேயம் மிந்த்ர மீட்வஸ்ப்த்ரா ஸுபகாசதி)

குலத்திற்கு இவள் வந்து என்னை அனுசரிப்பவளாக  இது போன்று அர்த்தமுள்ள மந்திரங்களைச் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும், ஸப்தபதி முடிந்தபிறகு தான் தம்பதிகளை(கை குலுக்கி)அக்ஷதையுடன் செய்ய வேண்டும் ஆசீர்வாதம்

                              26,அச்மாரோஹணம் (அம்மி மிதித்தல்)

இந்த ஹோமம் முடிந்தபின்னர் அச்மாரோஹணம் (அம்மி மிதித்தல்) அச்மந்த எனின் கல் அல்லது சிக்கிமுக்கி கல் என்பதை குறிக்கும், அக்னிக்கு வடபுறத்தில் கோலமிட்டு வைக்கப்பட்டிருக்கும் அம்மி மீது வரன் பத்நியின் பாதத்தை தூக்கி வைத்து
(அதிஷ்டேமம் அச்மானம் அச்மேவத் வம் ஸ்திரா பவ

அபிதிஷ்ட பிருதயந்த; ஸஹஸ்வ பிருதநாயத;)

"கரடு முரடாகவும் வாழ்க்கை இருக்கும்,சிக துக்கம் வருங்கால் இக்கல் போல் ஸ்திதப்ரஞையுடன் இரு" எனக் கூறுகிறான் நமது ஸம்பரதாயங்களையும் வேதோக்தமாய் செய்யப்படுகின்ற சடங்குகளையும்

சேர்த்துப்பார்க்கும் சில தத்துவங்கள் வெளியாகின்றன,முன்னர் ஊஞ்சலின் போது ஊஞ்சலானது முன்னும் பின்னும் ஆடுவது போல வாழ்க்கை இருக்கும் என்ற போது மந்திரங்கள் இல்லை,ஏனெனில் அப்பொழுது அவள்

விளையாட்டு பருவத்தில் இருந்தாள்,ஆனால் இந்த சமயம் சடங்குகளில் பலவித நேரடியாகக் கலந்து கொண்டதால் பக்குவம் ஏற்பட்டிருக்கிரது 

(4,நாள் கல்யாணத்தில்) ஆகவே இந்த அம்மிக்கல்லைவைத்து மந்திரோக்தமாக உயரிய வாழ்க்கையின் நோக்கங்களை சிறிது புகட்டுவதாகவும் அமைந்திருக்கிறது வீடுகளில் நகர்த்தக்கூடியதும் பெண்களுக்குப் பழக்கமானதுமான இருப்பதால் கல் என்பதற்கு அம்மியைப்

பயன்படுத்தி வந்துருபதாக தெரிகிறது அச்மந் என்பது அமிழில் (அம்மி)என

மருகுவிருக்கலாம்         27,ஸாஜ ஹோமம் அல்லது பொரியிடல்

(இமாந் லாஜானாபபாமி ஸம்ருத்தி கரணான் மம,

தீரகா யுரஸ்து மே பதிரேத ந்தாம் க்ஞாதயோ மம.)

எனக்கு எவ்வகையிலும் மேன்மையளிக்கிற பொரியினை அக்னி தேவருக்கும் அர்ப்பணிக்கிறேன்,( என் கணவர் நீண்ட ஆயுள் உடையவராக

இருக்க வேண்டும் என் சுற்றத்தார்கள் நன்மை பெற வேண்டும் லாஜ;பொரி,பொரி மங்களகரமானது,ஆதிகாலத்திலிருந்தே இந்த பொரியிடல் என்ற பழக்கம் இருந்து வருகிறது என்பதைக் காட்டுவதற்காக

பத்னியின் கையில் நேய்யை தடவி பெண்ணின் சகோதரர் பொரியை அவள் கரங்களில் போட அதை மணமகன் பத்நியின் கரங்களைத் தாங்கியவாறு அவளுடைய விரல் நுனிகளால் அக்னியில் இட்டு தன் கணவர் தீர்க்கயுசுடன் வாழவேண்டும் என்ற இவளின் விருப்பத்தை பூர்த்தி

செய்ய வேண்டுகிறேன்  இதன் மூலம் தன்குலமும் தன் கணவன் வீட்டாரின் குலமும் சகல சௌபாக்யத்துடன் திகழவேண்டும்

செய்ய வேண்டும் பொரியிட்ட மைத்துனருக்கு உரிய மரியாதை செய்துவிட்டு அக்னியை மீண்டும் வலம் வர வேண்டும் இந்த அக்னியத் தான் வாழ்நாள் முழுதும் காப்பாற்றி நித்ய ஔபாஸனாதிகளைச் செய்து வர சேமம்                28,மௌஞ்சியை அவிழ்த்தல்

தொடக்கத்தில் பெண்ணிற்கு இடுப்பில் கட்டிய தர்பையால் ஆன மௌஞ்சிப் பில்லை,அதற்கான மந்திரத்தைச் சொல்லி அவிழ்க்க வேண்டியது,                           ஜயாதி ஹோமம் 

இந்த ஹோமம் கந்தர்வர்கள்,அவர்கள் மனைவியர் மற்றும் சில தேவர்களின் அனுக்கிரஹம் கிடைக்க செய்யப்படுவதாகும் அந்த நல்ல வைதீக கார்யங்கள் முற்றுப் பெறும்போதும் இந்த (132)ஆகுதிகளைக் கொண்ட ஜயாதி ஹோமம் செய்யப்பட வேண்டும்

                            ஆசீர்வாதம்-ஹாரத்தீ

பெற்றோர்கள்,பெரியோர்கள்,வைதீகர்கள்,அனைவரும் மந்திரங்கள் மூலம் மனதார வாழ்த்தி அக்ஷதை போடும்போது ஆசீவாதமாகும்,இதனை தொடர்ந்து ஹாரத்தீ எடுக்கப்படுகிறது

 

                                        29,கிருஹப்ரவேசம்,ப்ரவேசஹோமம்

விவாகம் செய்து கொண்ட மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் இல்லத்திற்குப் புறப்பட ஆயத்தமாவதைக் கூறப்பட்டிருக்கிறது தன்

மனைவியுடன் ஔபாசனப் பானையிலுள்ள அக்னியுடன் புறப்பட வேண்டும் அக்னியை ஜாக்ரதையாகக் காப்பாற்றவேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது,வழியில் சில பாதுகாப்புக்காகவும் விதிவிலக்குக்காகவும் சில மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று கூறப்படும்

கிருஹப்ரவேசம் என்பதை இப்பொழுது லௌகிகமாக பாலும் பழமும் கொடுத்து முடித்துவிடுகிறோம்,பிரவேச ஹோமம் என்பதை பிள்ளை வீட்டில் செய்வது உத்தமம்,பெண்ணை (Red Carpet)சிவப்புக்கம்பளம் போட்டு

வரவேற்க வேண்டும்,என்று வேதங்கள் சொல்கின்றன

லோஹிதம் சர்மாடுஹம் ப்ராசீன க் ரீவ முத்தரலோகமத்யே அகாரஸ்யோத்தரயா அஸ்தீர்ய கிருஹான் ப்ரபாத்யந்துத்தராம் வாசயதி த க்ஷிணேன ந ச தே ஹலீம் அபிதிஷ்டதி சிவப்புக் கம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் விரித்து வண்டியிலிருந்து பெண்ணை வலது காலை முதலில் வைத்து வாசற்படியிலோ ரேழியிலோ காக்க வைக்காமல்

உள்ளே அழைத்து வர வேண்டும்  அப்பொழுது அவள் சொல்ல வேண்டுய

க்ருஹான் பத்ரான் அஸுமனஸ;ப்ரபத்யே அவீரக்நீ விரதவதஸ் ஸுவீராந்

இராம் வஹதோ க்ருதமுக்ஷமானாஸ் தேஷ்வஹகும் ஸுமுநாஸ் ஸம்விஸாமி,)  மக்களை அழிக்காமல் காப்பவளான நான் நல்ல மனமுள்ளவர்கள் வாசம் புரிவதும் மங்களகரமானதுமான இந்த வீட்டை அடைகிறேன்,நான் நல்ல மனதுடன் இங்கு பிரவேசிக்கிறேன்,பிறகு பிரவேச ஹோமம் செய்ய வேண்டும்(பதிமூன்று ஆஹுதீகள்) இந்த ப்ரவேச ஹோமத்தை பிள்ளை வீட்டில் செய்தால் நல்லது,இந்த மந்திரங்கள் அவர்கள் இருவருக்கும், நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர பல கோடி தேவதைகளை ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளன,

    30,துருவன்,அருந்ததி பிரார்த்தனை,லேகா ஹோமம்

தம்பதிகளில் சிறந்தவர்கள் வசிஷ்டர்-அருந்ததி ஆவர்,பதிவ்ரதா தர்மத்தில் சிரோமணி அருந்ததி,சப்தரிஷி மண்டலம் என நக்ஷத்ர கூட்டம் ஒன்று வானில் உண்டு என்றும்(pole star)நிலைத்திருக்கும்,"துருவ"நக்ஷத்திரத்திற்கு மேற்புறம் காணப்படும் நிலைத்தன்மை உடையவற்றையும் சிறப்பான வாழ்க்கை நடத்தியவர்களையும்"திருமணம்"மூலம் புதுமணவாழ்க்கை தொடங்கும் தம்பதிகள் நினைவில் கொள்வது சாலச்சிறந்தது,இதன் காரணமாகவே சப்தரிஷி மண்டலத்தில் சூக்ஷ்மமாக உள்ள அருந்ததி நக்ஷத்திரத்தை நிலையாக உள்ள துருவ நக்ஷத்திரம் மூலம் பார்க்க வேண்டும்,அருந்ததி நக்ஷத்திரம் உத்திராயண காலத்தில் நன்கு தெருயும், எனவே தான் உத்தராயணத்தில் விவாஹம் செய்வது சிறப்பானது கருதப்படுகிறது துருவா நீ அழிவில்லாத சிரஞ்சீவி,சத்யத்திற்கு காரண்மானவர்,ஸ்திரமாக இருப்பவர்,த்ருவம் என்ற பெயரைப் பெற்றவர்  சுற்றுகின்ற நக்ஷத்திரங்களுக்கு கட்டுத்தறியாக உள்ளவர்,அத்தகைய நீர் சத்ருக்கள்  எங்களை ஸ்திரமாக இருக்க செய்யும் என்ற பொருளுள்ள மந்திரம் சொல்லி அருந்ததி பார்க்கப்படுகிறது

                   31 சதுர்த்தி ஹோமம்,சேஷ ஹோமம்

விவாஹமான நாலாவது நாள் காலை ஸாம சாகையினர் சதுர்த்தி ஹோமம் செய்ய வேண்டியது,மற்ற சாகையினர் நாலாம் நாள் பின்னிரவு சேஷ ஹோமமாகச் செய்வார்கள் விஸ்வாஸு எனும் கந்தர்வம் காமம் அனுபவிப்பதற்காக பெண்களின் உடலில் புகுந்து கொள்கிறான் இந்த சேஷ

ஹோமத்தை செய்வதன் மூலம் அவளை விரட்டி பெண்ணை ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கும்

            இந்து திருமணத்தில் சில விதிமுறைகள்

ஒரே கோத்திரத்தில் உதித்தவர்கள் கூடாது,முன்னோர்களில் தகப்பன் வழியாக பிறந்த தாயாதிகள்(பங்காளிகள்)வீட்டுதொடர்புள்ளது,(காச்யப கோத்திரத்தில்)செய்யலாம்,ஆனால் த்ரயாதி லேயம் பஞ்தார்லேயத்தில் பஞ்சார்லேயம் த்ரயார் லேயத்திலும் மாற்றி இருக்கும்ப் பக்ஷத்தில்

(ஆணுக்கு பெண் மூத்தவளாக இருக்கக் கூடாது)

(ஜோடி பிரிந்தவர்கள் யாராயினும் தாரை வார்த்து கொடுப்பதில்லை)

 அமங்கலத்தவம் அடைந்தவர்கள் மணப்பெண்ணை மணவறைக்கு அழைத்து வருதலோ மாலை அணிவித்தலோ உடனிருப்பதோ கூடாது முதல் ஆசி வழங்குதலும் இல்லை தீபம் ஏற்றுவதும் கூடாது,

(மணமக்களுக்கு கருப்பு கலக்காத புத்தாடையே வாங்குதல்)

(ஆசௌசம் வந்துபோதும் மாதா பிதா சிரார்த்தப் பக்ஷமும் கூடாது)

(மணமக்களுக்கு வயது கிரமத்தில் இளையவராக உள்ளவர்கள் தாரை வார்த்துக் கொடுக்க அருகதை இல்லை)

ஒருவர் அணிந்த திருமாங்கல்யத்தை மற்றவர் பிறர்க்கு கட்டக்கூடாது, கட்டிய திருமாங்கல்யத்தை எந்த சமயத்திலும் கழற்றவோ பிறர்கண்ணில் படும்படியாகவும் அணிந்து கொள்வதோ கூடாது,புது சரடு மாற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலும் தாலி இல்லாமலும் வாசற்படியை தாண்டக்கூடாது)

(மஞ்சள் பூசிய சரட்டைத்தான் முதலில் உபயோகப்படுத்தவேண்டும்)

(ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் வாழ்க்கை முழுவதும் முழுமையாக நம்ப வேண்டும்)

 


Please visit again to check for latest updates.

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed & Managed by TRS Iyengar