May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Nama: Shivaaya, Shivaaya Nama: Om.

உடலுக்கு ஒன்பது வாசல்!

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன 1,சூரியன்-இடக்கண் 2,சுக்கிரன்-வலக்கண்வாசல் 3,சந்திரன்-வாய் வாசல் 4,புதன்-இடமூக்கு வாசல் 5,செவ்வாய்-வலமூக்கு வாசல் 6,வியாழன்-வலக் காதுவாசல் 7,சனி-இடக்காது வாசல் 8,இராகு-மலவாசல் 9,கேது-சிறுநீர் வாசல் ஆகும் இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது

மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி

நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

தென்னைமட்டை இரகசியம்!

தென்னமட்டை ஒருவரின் தலையில் விழ்வது நல்லதன்று! அது மரணத்துக்குச் சமமாகும்,"தென்னைமட்டை தலையில் விழந்தால் தேசம் பூரா அழிந்துவிடுமே"இது விஜய நகரத்தில் சாம்ராஜ்ஜியம் அழியக் காரணம்

அரசரின் தலையில் தென்னை மட்டை விழுந்ததே! அதே போல் திருநெல்வேலியில் ஆட்சி செய்த கட்டபொம்மன் தலையில் தென்னைமட்டை விழுந்ததனால் அவர்தம் ஆட்சியை இழந்து தூக்கில் தொங்கினார்!

இந்தியாவும் புதனும்!

நவகோள்களுள் புதன் இந்தியாவுக்கு வெகு அருகில் இருக்கிறது காவியம்

வானவியல்,சாஸ்திரம்,ஆன்மீகம்,கணிதம் ஆகியவற்றிற்குக் காரணகர்த்தா

புதன் ஆவார் அதனால்தான் நம் நாட்டில் பற்பல மகான்கள், ரிஷிகள், வானவியல் நிபுணர்கள்,ஜோதிடர்கள் தோன்றினார்கள் கணிதத்தில்

மிகப்பெரிய கண்டுபிடிப்பான பூஜ்ஜியத்தைக் கண்டதும் நம்நாடுதான்,

மேலும்,புதன் கிரகம் அறிவையும்,கற்பனையையும் அள்ளித்தரும் கிரகம்

அதனால்தான் நமது நாட்டில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற உலகம்

போற்றும் காவியங்கள் தோறின ஆனால்,புதன் ஒரு வறுமைக்கிரகம்

அதனால்தான் நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின்

எண்ணிக்கை அதிகமாகும்  

பணக்கார நோய்!

ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் மிகவும் பலம் பெற்றிருந்தால் கார்,பங்களா

பெண் இன்பம் என அனைத்துச்சுகமும் வாய்க்கும் ஆனால்,சுக்கிரன் மிகவும் சர்க்கரைப் பிரியர்,நீரிழிவு நோய்க்குக் காரணகர்த்தாவாய் உள்ளவர்

எனவேதான் அவரின் ஆதிக்கம் அதிகமாய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோயைத்(சர்க்கரை வியாதியை) தந்துவிடுவார்,சுக்கிரபகவான்,சுகங்களைத்

தரும் சுக்கிரபகவான்,நீரிழிவு நோயையும் தந்துவிடுவார் இப்போது புரிகிறதா,பணக்காரர்களைச் சர்க்கரை வியாதி அதிகம் தாக்குவதன் இரகசியம்?

நகை கூறும் இரகசியம்

"பொன்னுக்கு வீங்கி" என்னும் வியாதி ஒன்று உள்ளது அந்த வியாதி ஏற்பட்டதால் முகம்,கை,கால் எல்லாம் வீங்கிவிடும்,அது உடலில் உப்பு அதிகமாவதால் ஏற்படும் நோய் என்கிறார்கள் டாக்டர்கள் அதற்கான காரணம்,ஒருவர் சாதகத்தில் குரு,தோஷம் பெற்றிருந்தாலோ குரு நீசம்  அடைந்திருந்தாலோ,குரு எட்டில் இருந்தாலோ இந்த நோய் ஏற்படும் ஏனெனில்,உப்புக்குக் காரணகர்த்தா,குரு ஆகும் மேலும்,இந்த நோய் ஏற்பட்டவுடன் நோயாளிக்குத் தங்கநகைகளை அணிவித்துவிடுவார்கள், உடனே அந்த வீக்கம்,வற்றிவிடும்,குருவிற்கு உரிய உலோகம்,தங்கம், எனவேதான்,குருவினால் ஏற்படும் இந்த நோய்க்குப் பரிகாரமாய் அவருக்கு  உரிய உலோகமாகிய தங்கத்தைப் போட்டவுடன் நோய் குணமாகிவிடுகிறதது ! இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும்,இந்தப்  பொன்னுக்கு வீங்கி ஏற்பட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை அமைந்துவிடும் என மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது . புத்திரகாரகன்"குரு" என்பதும் ஆச்சரியமான ஒன்றாகும்,

யார் அலி?

எந்த இலக்கின்மாய் இருந்தாலும்,அவர் பார்வை இல்லாது சனி வீட்டில் புதனும்,புதன் வீட்டில் சனியும் இருந்து பரிவர்த்தனை ஏற்பட்டால் அந்த  ஜாதகர் அலித்தன்மை பெற்றவராய் இருப்பார்

சதயம் நட்சத்திரம்!

சதயம் நட்சத்திரம் உடைய ஆண்களுக்குப் பெண் பிள்ளைகளே பிறப்பார்கள் ஆண் குழந்தை இருப்பது கஷ்டம், அதே போல் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு ஆண் பிள்ளைகளே பிறப்பார்கள் பெண் குழந்தை இருப்பது கஷ்டம்,ஆனால் அவர்களுள் சாதகம் பலம்  பெற்றிருந்தால் அதன் பலன் மாறும்,

அழகிய பெண்!

கடக இலக்கினமாகி,அதிலேயே சந்திரன் இருக்கப்பெற்ற பெண்,அழகில்   இரதியாவாள்,வனப்பும்,இளமையும் தோற்றப் பொலிவும் உடையவளாய் இருப்பாள் .

ரோஜாப்பூ இரகசியம்!

ஒரே ஒரு ரோஜாப்பூவை மட்டும் தன் கூந்தலில் வைத்துக்கொள்ளவும் காதில் வளையத்தை அனிந்து கொள்ளவும் விரும்பும் பெண்ணுக்குச் செவ்வாய் அல்லது இராகுவின் தசாபுக்தி நடப்பு எனத் தெரிந்துகொள்ளலாம்

இரகங்களும் காய்களும்

சில காய்கள் சில கிரகங்களின் சாரம் பெற்றுள்ள இரகசியத்தைப் பாருங்கள்! வெண்டைக்காய் புதன் சாரத்தையும் புடலங்காய் சந்திரன் சாரத்தையும்,முட்டைக்கோஸ்,காலிஃபிளவர் ஆகியன சுக்கிரனின் சாரத்தையும் பெற்றுள்ளன!

பூமிக்காரகன் இரகசியம்!

பூமிக்காரகன் செவ்வாய் என்று சொல்வதில் மட்டும் அர்த்தம் இல்லை! பூமியின் மேற்பரப்பிலிருந்து அரை மீட்டர் ஆழம் வரைதான் செவ்வாயுடையது,பிறகு,ஆழமாய்ச் செல்ல அந்தப் பகுதி சனி பகவானுடையது,அதனினும் ஆரமாய்ச் செல்ல அது இராகு பகவானுடையது ஆகும்,

பற்களின் இரகசியம்!

நமது வாயிலுள்ள பற்களின் மேல்வரிசையைச் சூரியனும்,கீழ்வரிசையைச் சனியும் ஆதிக்கம் செய்கிறது!

பெண்களின் ருது இரகசியம்!

ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமானது பிறந்த ஜாதகமே ஆகும்,ருது ஜாதகம் எப்படி என்று என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்,ஒரு பெண்ணானவள் தாமதமாய் ருதுவானால் அந்தப் பெண்ணிற்கு ஏழைரைச் சனி அல்லது கேது திசை நடப்பில் இருக்கும் எந்தத் திசையாய் இருந்தாலும் சூரியன்,செவ்வாய்,குரு ஆகிய கிரகங்களின் புத்தியோ, அந்தரமோ நடைபெறும்போதுதான் ஒரு பெண் பூப்பெய்த முடியும்,

பன்றி தரும் சகுனம்!

நாம் ஒரு காரியத்தை நினைத்துச் செல்லும் சமயம், பன்றி எதிர்நோக்கி  வந்தால் நல்ல சகுனம், செல்லும் வேலை மிகச்சிறப்பாய் வெற்றி பெறும் .

கிரகங்களும் இராகங்களும்!

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒர் இராகம் உள்ளது அந்த இராகத்தினால் அந்தக் கிரகங்களைச் சந்தோஷப்படுத்தலாம்,1,சூரியன்-ஹரிகாம்போதி

2,சந்திரன்-வனஸ்பதி3,செவ்வாய்-காமவர்த்தினி4,புதன்-சக்ரவாகம் 5,வியாழன்-கோசலம்6,சுக்கிரன்-தர்மவதி7,சனி-தடாகப் பிரியா,

விருத்தியாகாத வீடுகள்!

1,கோபுரத்தின் நிழல் விழும் வீடும்,2கோபுரத்திற்கு நேரில் இருக்கும் வீடும்  3,விநாயகர்,சிவன் ஆகிய ஆலயங்களுக்கு முன்புள்ள வீடுகளும் 4,விஷ்ணு  ஆலயத்தின் பின்புறமுள்ள வீடுகளும் விருத்தியம்சம் பெறா,எனவே இத்தகைய வீட்டில் வசிப்பதைத் தவிர்க்கவேண்டும்,

காந்திக்கு மரணம் நேரும் என முன்னரே கூரிய ஜோதிடம்!

காந்தி சுடப்பட்டடே மரணமாவார் என்பதை நமது ஜோதிடக்கலை முன்பே  கூறியுள்ளது,அதுபற்றி,இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதராய் இருந்த   "ஜான்கென்னட்" என்பவர் தாம் எழுதியுள்ள"இந்தியன் அஸ்ட்ராலஜி அண்டு பால்மிஸ்ட்ரி"என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,அதனைத் தெரியப்படுத்தியவர் திருத்தணி கோவில் அருகே வாழ்ந்த ஜோதிடர் ஒருவர்,அவரைக் "காந்தி ஜோசியர்" என்றே வழங்கினார்கள் அவர் இறந்துவிட்டார்  அவர் இறந்துவிட்டாலும் அவர் வீட்டை இன்றும்  "காந்தி ஜோசியர் வீடு"என்றே குறிப்பிடுகின்றார்கள்

சிறப்புப் பெறும் மழை நீர்!

சித்திரை மாதத்தில் அசுவினி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது பெய்யும் மழையின் நீருக்கு "கங்கோதகம்"ஹம்ஸோதகம்"என்னும் விசேஷப் பெயர்கள் உண்டு,

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!

இதன் அர்த்தம் என்ன? "சட்டியில் இருந்தால் அகப்பையில்ன்வரும்"என்பது  நம்மிடையே வழங்கி வரும் ஒரு சாதாரணப் பழமொழி ஆகும் அதன் பொருளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்,அதன் உண்மையான பொருள் என்ன? பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் முருகனைத் தியானித்து,"சஷ்டி திதி" அன்று விரதம் இருந்தால் "அகப்பையில்"அதாவது,"கருப்பையில்"குழந்தை உண்டாகும் என்பதுதான்!

அனுபவிக்கக் கூடாதவை

1,சிவன்சொத்து2,பங்காளிசொத்து3,பிராமணர்கள் சொத்து 4,பிள்ளை இல்லாதவர் சொத்து5,கோவில் சொத்து6,கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும்,சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும்,எனவே எக்காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட சொத்துகளை அனுபவிக்கக்கூடாது எனவும்,அதற்குப் பரிகாரமே இல்லை எனவும்,நம் ஆன்மிக ஞானிகள் கூறி உள்ளார்கள்!

பூசத்து பழையது பூனை கூடத் தின்னாது-இதன் பொருள் என்ன

"பூசத்துப் பழையது பூனை கூடத் தின்னாது"என்பது பழமொழி இதற்குச் சரியான பொருள் தைபூசத்துப் பழையதைப் பூனைகூடத்தின்னாது  என்பதாகும்,தைமாதம் அறுவடைக்காலம்,அதுவரை விவசாயிகள் பசிபட்டினியில் கிடைத்ததை உண்பார்கள்,பழைய சோற்றை உண்பார்கள்,தவிட்டு நெய் கிழங்குகளையும் சமைத்து உண்பார்கள், தைமாதத்தைப் பூச நட்சத்திரத்துக்குள் விளைந்த நெல்லை அறுவடை செய்து உலர்த்தி,வீட்டில் குதிர் பத்தாயங்களில் சேமித்து வைத்துவிடுவார்கள் ஆகவே எல்லார் வீட்டிலும் புதுநெல் அரிசிச் சாதம் வடித்துச் சாப்பிடும் நிலை உருவாகிவிடும்,ஆகவேதான் அப்போது யாரும் தம் பழையதை வைத்திருக்க மாட்டார்கள்,எதையும் தின்னும் பூனைக்குச் கூடச் சமைத்த சுடுசோறு கிட்டும்,அவ்வாறு வயிறு நிறைய உண்டபிறகு,

பழையதை பூனை விரும்பித் தின்னுமா?தைபிறந்தால் சோற்றுப்பஞ்சம் தீர்ந்து விடும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் பூச நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு இந்தப் பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்,

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்-இதன் பொருள் என்ன?

"கண்கெட்ட பிறகு சூரிய நமத்காரம்" என்று ஒரு பழமொழி உண்டு,அதன் பொருள் என்ன,? கண்களுக்கு சூரியனே காரணகர்த்தா ஆகும், சூரியனை வழிபட்டு வந்தால் கண்பார்வை வளப்படும், சூரிய்னை அதிகாலை வேளையில்,கைகளை முறைப்படி வைத்து அவரைப் பார்த்து, அவருக்கு உரிய மந்திரத்தைக் கூறி வழிபட்டால் வளம் ஏற்படும்,காலம் கடந்தோ, கண்கெட்டுவிட்ட பின்போ சூரியனை வழிபடுவதால் எப்பிரயோஜனமுமில்லை என்பதை உணர்த்துகிறது இந்தப் பழமொழி!

பறவைகள் உணர்த்தும் சகுனம்!

ஆந்தை வீட்டில் வசித்தாலும் அல்லது இறந்தாலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் உண்டாகும், நரி புகுந்தால்,வீட்டை விட்டு வெளியேறுவார்கள் பருந்து புகுந்தால்,அரசரால் துன்பம் உண்டாகும்,

துர்க்கை தரும் கிரக நிவர்த்தி!

ஒருவருக்குச் சூரிய திசையில் இராகு புத்தி நடக்கும் போது ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும்,அதே போல்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,வெள்ளி,சனி,கேது,ஆகிய திசைகளில் இராகுபுத்தி நடக்கும்போது முறையே திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன், வெள்ளி,சனி,திங்கள் ஆகிய கிழமைகளில் அமையும் இராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் அது செவ்வாய்க்கிழமை இராகுகாலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும்!

கை குலுக்கும் ஜோதிடம்!

ஒருவர் கை கொடுப்பதைக் கொண்டே அவரது குணத்தைக் கூறிவிடலாம்,

1,கைகொடுக்கும்போது மூன்று விரல்களை மட்டும் பிடித்துக் குலுக்குபவர்கள் மனம் விட்டுப் பேசமாட்டார்கள் 2,இரு கைகளாலும் பற்றிக் குலுக்குபவர்கள் அபரிதமான அன்பைப் பொழிபவர்களாய் இருப்பார்கள் 3,பட்டும் படாமலும் கைகுலுக்குபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் ஆவார்கள் 4,கைகளை மிகவும் அழுத்திக் கை குலுக்குபவர்கள் உறுதியான நெஞ்சம் உடையவர்கள் அவர்களைப் பூரணமாய் நம்பலாம்,

தடைகளை நீக்கும் தானங்கள்!

1,சனீஸ்வரரால் பாதிக்கப்பட்டவர்கள் தீராத வியாதி உடையவர்கள்,இரத்த சம்பந்தமான வியாதி உடையவர்கள்,குஷ்ட ரோகிகளுக்கு எள்ளுருண்டையைத் தானம் செய்ய வேண்டும்,2,பிரயாணத்தில் தொல்லைகள் நீங்கமுடமானவர்களுக்கு இரும்புத்தானம் செய்ய வேண்டும்

3,குடும்பத்தில் சண்டை,சச்சரவுகள் நீங்க நல்ல எண்ணெய், எள்ளு ஆகியவற்றைக் கருப்பு நிறப் பிராமணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்

4,கால் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குக் கருப்புநிறச் சந்யாசிகளுக்குச் செருப்புத் தானம் செய்ய வேண்டும்,5,கடன் தொல்லைகள் நீங்கக் கருப்புநிற ஏழைகளுக்கு எருது தானம் செய்ய வேண்டும் 6,மரணத்தறுவாயில் உள்ளவர்களும்,மாரகஅவஸ்தை உள்ளவர்களும் வேதம் படித்த அந்தணருக்குக் கருப்பு நிறப் பசுவைத் தானம் செய்ய வேண்டும்,7,திருமணத்தடை உடையவர்கள் ஸ்ரீராமர் ஜாதகத்தை விநியோகிக்க வேண்டும் பணக்காரர்கள் புதுமணத் தம்பதியருக்குத் திருமாங்கல்யச்சரட்டைத் தானம் செய்ய வேண்டும்,8,கணவன் மனைவி பிரச்சினைக்களுக்கு ஏழைகளுக்குப் பஞ்சைத் தானம் செய்ய வேண்டும்  9,புத்திர பாக்கியம் பெறக் கன்றுடன் கூடிய வெள்ளைநிறப் பசுவைத் தானம் செய்ய வேண்டும்,

ஆபிரஹாம் லிங்கனும் நவக்கிரகங்கலும்!

அமெரிக்காவின் 16, ஆவது ஜனாதிபதியான ஆபிரஹாம் லிங்கனது வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு! அவரின் வாழ்க்கையில் வாரத்தின் ஏழு நாள்களில் நிகழ்ந்தவை உணர்த்துகின்றன, இதோ அந்தப்பட்டியல்1,ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பிறந்தார்2,முதன் முதலில் திங்கள்கிழமையன்று தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்  3,செவ்வாய்க் கிழமையன்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்  4,புதன்கிழமையன்று பார்கவுன்ஸிலில் இடம் பெற்றார் 5,வியாழக்கிழமையன்று உலகப்புகழ் பெற்ற "கெட்டிஸ்பர்க்" உரையை நிகழ்த்தினார் 6,வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கியால் சுடப்பட்டார், 7,சனிக்கிழமையன்று அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,மரணம்  அடைந்தார்,

மரணத்தைக் கூறும் கண்ணாடி?

எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி உடையாதவாறு விழிப்பாய் இருக்க வேண்டும் அப்படி உடைந்தால் நெருங்கிய வகையில் மரணம் ஏற்படக்கூடும்!

அரசமரம் தரும் எச்சரிக்கை!

ஒருவர் அரச மரத்தை வெட்டினால் அவருக்குக் கெடுதல் ஏற்படும் எனச் சித்தர்கள் கூறியுள்ளார்கள்,எனவே,எச்சரிக்கையாய் நடந்துகொள்ள வேண்டும்,

எதை முதலில் திறக்க வேண்டும்!

காலையில் எழுந்ததும் முதலில் கொல்லைக் கதவைத்தான் திறக்க வேண்டும்

பெண்களின் கவனத்திற்கு!

பெண்கள் பலர் வெள்ளிக்கிழ்மையன்று விளக்கைச் சுத்தப்படுத்துகிறார்கள்  அது தவறான விஷயம்! முதல் நாளே(வியாழக்கிழமை) விளக்கைச் சுத்தப்படுத்தி வைத்துவிட வேண்டும் .

நல்லது கூறும் பல்லி!

மாலை வேளைகளில் கிழக்குத் திசையிலிருந்து பல்லி குரல் கெடுப்பது நல்லதாகும்!

குடுகுடுப்பை தரும் எச்சரிக்கை!

நடுச்சாமத்திற்கு மேல் வரும் குடுகுடுப்பைக்காரனை நேருக்கு நேர் சந்திக்கக்கூடாது! அதனால் தீமையே விளையும்!

புதுப்பெண்கள் கவனிக்க

திருமணமாகி முதன்முதலில் மாமியார் வீட்டுக்குச் செல்லும் புதுப்பெண்  முதன்முதலாய் உப்பு,நெல் தவிடு ஆகியவற்றில் கை வைப்பது மிக மிக  நல்லது ஆகும்!

பூ கூறும் சோதிடம்!

புது மருமகள் முதன்முதலாய்ப் பூச்சூடும் போது அந்தப் பூ வாடாமல் இருந்தால் மாமியார் நல்லவராய் இருப்பார்!

வேண்டா  இலவசம்!

எள்ளை யாரிடமும் இலவசமாய்ப் பெறக்கூடாது! ஒசியில் கொடுக்கிறார்களே என வாங்கிவிடக்கூடாது,அது குடும்பத்திற்கு ஆகாது! சிறிதளவாவது காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்,

நிலாவைப் பார்க்காதே!

அமாவாசையிலிருந்து நான்காம் நாளில் தோன்றும் நிலாவைப் பார்க்கக்கூடாது!அப்படிப் பார்த்தால் கெடுதலைத் தரும்,என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

ஆண்களுக்கு மட்டும்!

ஆண்களின் இடக்காலில் கல் தடுக்கினால் தடங்கல் ஏற்பட்டு அவர்கள் செய்ய விரும்பும் காரியம் நிறைவேறாது என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

உலக்கையால் குடும்பம் அழியும்!

உலக்கையை வெட்டி அடுப்பில் வத்தால் அதை வத்தவர் குடும்பமே அழிந்து விடும்!இவ்வாறு நமது சாஸ்திரம் எச்சரிக்கை விடுக்கின்றது!

நமது சாஸ்திரங்கள் நமது வாழ்க்கைக்கான சில எச்சரிக்கைகளைக் கூறி உள்ளன, அவை:

1. இரவு நேரங்களில் தலையிலிருந்து பேன் எடுக்கக்கூடாது,
2. வெற்றிலையை வெறும் தரையில் வைக்கக்கூடாது
3. வெற்றிலையை மூன்றாய்ச் சேர்த்துப் போடக்கூடாது
4. சுபகாரியம் பற்றி எழுதுகையில் பேனாவில் மை தீர்ந்து விடக்கூடாது
5. தெய்வத்திற்குச் சமர்ப்பிக்கும் பூவை முகர்ந்து பார்த்தல் கூடாது
6. நடந்து கொண்டே பல் தேய்க்கக்கூடாது 
7. சாப்பிடும்போது ஒற்றை விரலை நீக்கிச் சாப்பிடக்கூடாது
8. குழந்தைகளின் தொட்டிலில் பெரியவர்கள் உட்காரக்கூடாது,
9. நெருப்பை வெந்நீரினால் அணைக்கக்கூடாது,
10. ழுழங்கையையும் ழுழங்காலையும் கட்டக்கூடாது
11. கன்னத்தில் கைவைக்கக்கூடாது
12. காலைஆட்டக்கூடாது
13. தலையணை மேல் அமரக்கூடாது
14. பஞ்சு பறக்கக்கூடாது
15. நிலைப்படிகளில் அமரக்கூடாது
16. நகங்களை வீட்டில் போடக்கூடாது!

நேருவின் வாழ்வில் இருபத்தெட்டு!

நேருவின் வாழ்க்கைக்கும் 28 என்னும் எண்ணுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது,ஆச்சரியமான விஷயம் ஆகும்!இதோ சில எடுத்துக்காட்டுகள்
1,நேரு பிறந்தபோது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது28,
2இந்திராகாந்தி பிறந்தபோது நேருவின் வயது28,
3, நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பிப்ரவரி28,
4,நேரு தம் மனைவி கமலா இறந்த பிறகு வாழ்ந்தது28,
5,நேருவின் உடல்,தகனம் செய்யப்பட்ட நாள் மே 28,ஆகும்

நெய் காய்ச்ச வேண்டா!

வெள்ளி,செவ்வாய் ஆகிய நாள்கள் மகாலட்சுமிக்கு உகந்த நாள்கள்,எனவே அந்த நாள்களில் நெய் காய்ச்சக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன!

வலம்புரிச் சங்கு விடும் எச்சரிக்கை!


வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்திருந்தால் மட்டும் அதிர்ஷடம் ஏற்பட்டுவிடாது,தோஷந்தான் ஏற்படும்,வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்துப் பூஜித்தால்தான் நல்லது நடக்கும்

தோஷம் தரும் நெல்லிக்காய்!


ஞாயிறு,சப்தமி, பொங்கல் அமாவாசை,வெள்ளிக்கிழமை ஆகியவற்றில் அமையும் சஷ்டி ஆகிய நாள்களில் நெல்லிக்காயை உண்ணக்கூடாது! அதனால் தோஷம் உண்டாகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன,

உலகம் எப்போது அழியும்?

உலகம் தோன்றிய நாள் முதலே உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி இருந்து கொண்டு தான் உள்ளது, என்று அழியும் எனப் பலமுறை ஆண்டு
ஆண்டு தேதி ஆகியன குறிக்கப்பட்டுப் பொய்யானதைச் சரித்திரம் கூறும், கி,பி,2000இல் உலகம் அழியும் என்ற ஆருடமும் பொய்யானது,உலகம் அழியப் போகிறது என முன்பே கூறிய சிலவற்றைப்பற்றி அறிவோம் கி,பி,1000ஆவது ஆண்டில் கெட்டவர்கள் ஆற்றில் வீசப்படுவார்கள் என்றும்
நல்லவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள் என்றும் கிறித்தவக்,குருமார்கள் அறிவித்தனர்,பல,ஆயிரக்கணக்கான மக்கள் அன்றைய தினம் ஜெருசலேம்,
நகருக்குப் புனிதயாத்திரையை மேற்கொண்டனர்,முன்னர் சொல்லப்பட்டது போன்று எதுவுமே நடைபெறவில்லை!மீண்டும் க்,பி,1033ஆம் ஆண்டில் பல ஆயிரம் மக்கள் ஜெருசலேமிற்குச் சென்றார்கள்,அவர்கள் அன்றைய தினம் ஏசுநாதர் திரும்பி வரவிருப்பதாய் நம்பினர்,அத்தகைய ஆருடங்கள்
தொடர்ந்து கூறப்பட்டன,1834ஆம் ஆண்டில் நியூயார்க்கைச் சேர்ந்த வில்லியம்மில்லர் என்னும் பிரசங்கி,இன்னும் இரு வருடங்களில் உலகம்அழியவிருப்பதாகவும்,அது பைபிளில் குறிக்கப்பட்டிருப்பதாகவும் மக்களிடையே உரையாற்றினார் ஆனால் 1836ஆம் ஆண்டில் உலகத்தின் அழிவு பற்றிய அறிகுறி எதுவும் தெரியவில்லையே என்று மக்கள் முணுமுணுத்தனர்,பின்னர் அவரே அந்தத் தேதி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும்,1843ஆம் ஆண்டு மார்ச்சு21ஆம் தேதியும் அழிவுக்கான நாள்கள் என்றும் அவர் தெரிவித்தார்,அதிர்ஷ்டவசமாய் 1844ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது; அதனால் மக்கள் யாவரும் அலறியடித்துக்கொண்டு,அங்குமிங்குமாய் ஒடினர்,ஜரோப்பிய நாடுகளே அல்லோலகல்லோலப்பட்டன, ஆனால் அந்தப் பதற்றமும் விரைவில் அடங்கியது. கலிபோர்னியப் பல்கலைக்கழகம் உலக முடிவுத் தொடர்பான கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது அதில் அதுவரை உலக முடிவுத் தொடர்பாக அவிழ்த்துவிடப்பட்ட சரடுகள் யாவும் விளக்கப்பட்டிருந்தன.


அதிசயப் பதினொன்று!

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந்த நாளன்று "பதினொன்று" என்னும் எண் ஒர் அதிசயத்தை நிகழ்த்தியது!அந்த அதிசயம் இதுதான், இரண்டாவது உலகமகாயுத்தம் முடிவடைந்த 1944ஆம் வருடம்,11ஆவது
மாதத்தில் 11ஆம் நாளன்று,காலை 11,00மணியளவில் ஆகும்,

முதல் இரவு அறையின் இரகசியம்!

முதல் இரவு அறையில் மணமகன் கிழக்கு நோக்கி இருக்க,மணமகள் அவனுக்குப் பால் பழம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும்,அதே போல்,கணவர் கொடுக்கும் பாலை மணமகள் மேற்கு அல்லது தெற்கு
முகமாய் அமர்ந்து அதனைப் பெறவேண்டும்,இப்படிச் செய்தால் தீர்க்க ஆயுளும், தம்பதியினரிடையே அன்பும் உண்டாகும்,

இது தெரியுமா?

வடதுருவத்தில் 30பாகையிலும்,தென் துருவத்தில்30பாகையிலும் உயிர் வாழ்கின்றவர்களுக்கு நட்சத்திர மண்டல ஆதிக்கம்,கிரகங்களின் ஆதிக்கம் சரிவாய் ஏற்படுவதால் அவைகளின் நேரடித் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆளாவது இல்லை,ஆகவே,அங்கெல்லாம் ஜோதிட சாஸ்திரம் தக்க பலன் அளிப்பது இல்லை, இதன் காரணமாகத்தான் பூமத்தியரேகையை ஒட்டிய வட-தென்கோளப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகிய கிழக்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, இந்தியா, வடஅமெரிக்காவின் ன்பகுதி, தென்அமெரிக்காவின் வடபகுதி, ஆப்பரிக்காவின் மையப்பகுதி போன்ற நாடுகளில் எல்லாம் ஜோதிடக் கலை பரவலாகப் பயன் தருகின்றது அங்கு ஜோதிடக்கலை சிறப்புற்று விளங்குகிறது ஆனால் மேலே சொன்ன எல்லைக்கு உட்படாத நாடுகளான வடஆசியா,ஜரோப்பா போன்ற கண்டங்களில் ஜோதிட சாஸ்திரங்கள் சரியான பலனளிப்பத்தில்லை! எனவே அங்கெல்லாம் ஜோதிடக்கலை சிறப்புப் பெறவில்லை!
 

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed & Managed by TRS Iyengar